ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
18 வயது பள்ளி மாணவருக்கு எமனான மின்கம்பி; அறுந்து கிடந்தது தெரியாமல் கால் வைத்ததால் சோகம்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குருசீலாபட்டு, பிச்சனூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவரின் மகன் குமரன் (வயது 18). இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே, நேற்று குமரன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததாக தெரிய வருகிறது. இதில் மின்சாரம் அவரின் உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர்: சார்ஜர் ஒயரால் பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு செயின் திருட்டு.! வீடுபுகுந்து துணிகரம்.!
மின்சாரம் தாக்கி சோகம்
இந்த சம்பவத்தில் குமரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குமரனின் மரணம் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிச்சனூர் ஏரியில் நிரம்பியுள்ள நீரை வேடிக்கை பார்க்கச் சென்றபோது, பிள்ளையார் கோவில் நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்தில் மின்சாரம் தாக்கி உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Big News: ஆம்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய காமக்கொடூரன்; அடித்துக்கொன்ற தகப்பன்..!