திருப்பத்தூர்: சார்ஜர் ஒயரால் பெண்ணின் கை-கால்களை கட்டிப்போட்டு செயின் திருட்டு.! வீடுபுகுந்து துணிகரம்.!



tirupattur-gold-chain-robbery

வீட்டில் பெண் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு துணிகர கொள்ளை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள குள்ளனூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவர் தனது வீட்டில் புறாக்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். 

கை-கால்களை கட்டிப்போட்டு கொள்ளை

இதனிடையே சம்பவத்தன்று புறா வாங்குவதாக கும்பல் ஒன்று வந்துள்ளது. வீட்டில் பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கும்பல், பெண்ணை சார்ஜ் வயரால் கை-கால்களை கட்டிபோட்டுள்ளது. 

இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்? இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பெண்களே உஷார்.!

காவல்துறையினர் விசாரணை

பின் பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 16 வயது சிறுவன் செய்யிற வேலையா இது? நிதிநிறுவன ஊழியரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறி.. மூவர் கைது.!