ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட விவகாரம்; 20 கிராமங்களை கண்காணிக்கும் காவல்துறை.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த தந்தை, தாய், மகன் என 3 பேர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், நகைக்காக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
தனிப்படை எண்ணிக்கை அதிகரிப்பு
ஐடி ஊழியர் செந்தில் குமார் (வயது 45), அவரின் தந்தை தெய்வசிகாமணி (வயது 78), மனைவி அலமேலு (வயது 75) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 8 சவரன் நகைகள் கொள்ளையடிப்பட்டது. இந்த விவகாரத்தில் முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தொய்வு காரணமாக தனிப்படைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சடலமாக மைக்செட் ஊழியர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம்.!
முன்னேற்றம் இல்லை
இந்நிலையில், 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 9 நாட்களாக விசாரணை நடந்து வரும் நிலையில் முன்னேற்றம் இல்லை. மொத்தமாக 850 க்கும் அதிகமானோர் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சேமலைக்கவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 20 கிராமங்களை அதிகாரிகள் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சடலமாக மைக்செட் ஊழியர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம்.!