Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
சாக்கு மூட்டையில் சடலமாக மைக்செட் ஊழியர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் ராஜ் (வயது 45). இவர் மைக்செட் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 28ம் தேதி பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில், உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சந்தைப்பேட்டை தெருவில் வீசி செல்லப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக திருவில்லிபுத்தூர் காவல் கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கொலை சம்பவம் குறித்து, அதே பகுதியில் வசித்து வரும் வின்சென்ட் (வயது 53) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞர் வெட்டிக்கொலை; சமாதானம் பேச அழைத்து கொடூரம்.. இன்ஸ்டா காதல் பயங்கரம்.!
இதையும் படிங்க: தாயை கொலை செய்து, மகன் தற்கொலை.. மனநலம் பாதிக்கப்பட்டு துள்ளத்துடிக்க சோகம்.!