திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
9 மாத கைக்குழந்தை, பெண் உட்பட 3 பேர் பலி; திருப்பூரில் பயங்கரம்.. பட்டாசு வெடித்துச் சிதறி சோகம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர், பொன்ம்மாள் வீதி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மனைவி சத்யா பிரியா. கார்த்திக்கின் மச்சான் சரவணகுமார். இவர் ஈரோட்டு நம்பியூர் பகுதியில் கோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தற்போது ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கோவில் பணிகள் தொடர்பாக கூடுதல் வரவேற்பு கிடைத்ததால், பொன்னம்மாள் வீதியில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று பட்டாசு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில் சோகம்.!
மருத்துவமனையில் அனுமதி
பிரதான சாலை வரை வெடி விபத்தின் சத்தம் கேட்டதால், அங்கிருந்த இளைஞர்கள் பலரும் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். வெடி விபத்து நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் & மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் லட்சுமி, உரிமையாளரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
3 பேர் மரணம், 10 பேர் படுகாயம்
விபத்து நடைபெற்ற வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதன் அருகில் இருக்கும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமாகின. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் குமார், 9 மாத கைக்குழந்தை செர்லின், உடல் சிதறிய நிலையில் பெண் என 3 பேரின் மரணம் உருட்டி செய்யப்பட்டது. 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பெண் உடல் சிதறி உயிரிழந்த காரணத்தால், அவரின் அடையாளம் தெரியவில்லை. அதனை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடந்த விபத்து.. தாய், தந்தை, மகன் விபத்தில் பலி.. நிர்கதியாய் 2 மகன்கள்.. உதவி கேட்டு கோரிக்கை.!