திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில் சோகம்.!
நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று நடந்த சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, அண்ணா குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 30). நவம்பர் மாதம் கோகுல்நாத்துக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; ஹெல்மட் அணியாததால் இரண்டு பேர் பலி.!
கார் கவிழ்ந்து விபத்து
அழைப்பிதழ்கள் தயாரான நிலையில், அதனை வாங்க உடுமலையிலிருந்து அந்தியூர் நோக்கி காரில் கோகுல்நாத் புறப்பட்டு சென்றுள்ளார். இவரின் வாகனம் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, திடீரென தாறுமாறாக இயங்கி சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இளைஞர் பலி
இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் வரும் மாதத்தில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞர், சாலை விபத்தில் உயிரிழந்தது அம்பலமானது. இதனால் இருதரப்பு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரம்: விபத்தில் உயிரிழந்த காதலி, அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலனும் தற்கொலை..!