மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருத்தணி: ஊராட்சி செயலாளர் நெஞ்சை பிடித்து சரிந்து விழுந்து மரணம்; ஊரக வளர்ச்சி ஆய்வுக்கூட்டத்தில் சோகம்.!
ஊரக வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த ஊராட்சி செயலாளர் மாரடைப்பால் காலமானார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில், இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஊரக தலைவர், பொறுப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அப்பா அம்மாவை கூட்டிட்டு வாப்பா... போதையில் மகனை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தகப்பன்.!
அந்த வகையில், திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேசனும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தார். அச்சமயம், அவருக்கு திடீரென மாரடைப்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பால் மரணம்
இதனால் நெஞ்சு வலி பொறுக்காமல், நெஞ்சை பிடித்தவாறு சரிந்து விழுந்துள்ளார். இதனைக்கண்டு பதறிப்போன நபர்கள், உடனடியாக அவருக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விரைந்து அவர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதனை செய்ததில் வெங்கடேசனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பெண் தூய்மை பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு; டூ-வீலர் மீது லாரி மோதி துயரம்.. திருமங்கலத்தில் சோகம்.!