மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் தூய்மை பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு; டூ-வீலர் மீது லாரி மோதி துயரம்.. திருமங்கலத்தில் சோகம்.!
நகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில், இருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் இரயில் நிலையம் அருகில், தேவர் சிலையை ஒட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்ற இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!
லாரி மோதி விபத்து
நகராட்சி தூய்மை பணியாளர்களாக நாகரத்தினம், லட்சுமி ஆகியோர் இன்று தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். அப்போது, திருமங்கலம் இரயில் நிலையம், தேவர் சிலை பகுதியில் லாரி மோதி விபத்திற்குள்ளானது.
இருவரும் பலி
கனகர லாரி மோதியதில் சாலையில் விழுந்தவர்கள் மீது, லாரியின் சக்கரம் ஏறி-இறங்கியது. நொடியில் நடந்த துயர விபத்தில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: 100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.!