ரூ.16 கோடி பாலம் எங்கே? திறந்து 3 மாதங்களில் மூடுவிழா கண்ட ஆற்றுப்பாலம்.. திருவண்ணாமலையில் சம்பவம்.!



in-tiruvannamalai-chengam-then-pennai-river-bridge-was

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், அகரம் - தொண்டமனூர் இடையே, ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலுவின் சார்பில் திறக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளம் ஆட்பறித்துச் சென்றது.

பாலம் காணோம்

பாலம் மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், வெள்ளம் குறைந்த பின்னர் பாலம் இருந்த இடம் தெரியாமல் உடைந்தது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன மக்கள், செய்வதறியாமல் திகைத்துப்போயினர். பொதுவாக பாலங்கள் வெள்ளம் போன்ற நேரங்களில் கரையோரத்தில் மண்ணரிப்பு அதிகம் இருக்கும் என்பதால், அங்கு தூண்கள் பாதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: கட்டை விரலில் பாம்பு கடித்து பெண் உயிர் ஊசல்; மழை நேரத்தில் கவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! 

4 மடங்கு அதிகம் நீர் வெளியேறியது

நீரின் வேகம் காரணமாக பாலம் பெரிய அளவில் சேதமடைந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாலத்தின் நீர்வேகம் தாங்கும் திறன் கணக்கிடப்பட்டதைவிட, 4 மடங்கு அதிக நீர் வெளியேறிய காரணத்தால், பாலம் பெரிய சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் விளக்கம் : 

அரசின் கணக்கீடுகள் போதாது

வழக்கமாக நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கும் பாலங்கள் கட்டப்படும்போது, அவை எதிர்காலத்திற்கும் பயன்படும் வகையில் திட்டமிட்டே கட்டப்படும். குறிப்பாக ஆறுகளுக்கு குறுக்கே உள்ள பாலங்களில், உச்சபட்ச வெள்ள அளவு, எதிர்காலத்தில் மழை அதிகம் பெய்தால், அப்போது அதிகபட்சமாக வெளியேற வாய்ப்புள்ள நீரின் அளவை கணக்கில் எடுத்தே கட்டப்பட்ட வேண்டும். 

இனி சிந்திப்பது நல்லது

அவ்வாறு கணக்கெடுக்கப்பட்டு கட்டுப்பட்டு இருந்தால், தற்போதைய வெள்ளத்தில் பெருவாரியான பாதிப்பை சந்திக்காமல் பேட்ச் ஒர்க் வேலைக்கு மட்டுமாவது பாலத்தின் பகுதிகள் எஞ்சி இருக்கும். இவ்வாறான மிகப்பெரிய சேதத்தினை சந்தித்து இருக்காது. கணக்கீடுகளை எதிர்காலத்தில் அரசுத்துறையினர் மாற்றி அமைக்க வேண்டும் என்பது கட்டுமான பணியாளர்களின் கருத்துக்களாக இருக்கிறது.

இதையும் படிங்க: "மரண பயத்த காமிச்சிட்டாங்க பரமா" - நொடியில் ஷாக் தந்த பாம்பு; காட்சிகள் வைரல்.!