கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த துயரம்.. வீடுபுகுந்து அத்துமீறல்.!

வீட்டில் தனியே இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி, கரடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜா (45). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: மர்ம நபர் ரயிலில் அடிபட்டு மரணம்.. 'ஆர்பிவி' என டாட்டூ.. திருச்சி அருகே சோகம்.!
இவர் வசித்து வரும் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
பெண் பலாத்காரம்
சம்பவத்தன்று பெண்மணி வீட்டில் தனியாக இருந்தபோது, வீடு புகுந்த ராஜா, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பெண்ணின் தாத்தா மற்றும் தாய், வேலைக்கு சென்றபோது இந்த சோகம் நடந்தது.
வீட்டிற்கு வந்த குடும்பத்தினரிடம் நடந்ததை பெண்மணி கண்ணீருடன் கூற, அவர்கள் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காவலரின் வாகனத்தில் அரசுப்பேருந்து மோதி சோகம்; திருச்சியில் துயரம்.. ஆயுதப்படை காவலர் பலி.!