திருச்சி: மதுபாட்டிலில் கிடந்த தவளை.. டார்ச் அடித்து பார்த்து அதிர்ந்த குடிமகன்.!



  in Trichy Liquor Bottle Frog 

திருச்சி மாவட்டத்தில் உள்ள சென்னகரை பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன். இவர் கூலித் தொழிலாளி ஆவார். நேற்று ஜனவரி 13 அன்று, சிறுகாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். 

மதுவாங்கி அருந்தினார்

அங்கு மது பாட்டில் வாங்கிய நிலையில், அதனை இருட்டான ஒரு இடத்தில் அமர்ந்து அருந்தியுள்ளார். அப்போது எதோ அடைத்து இருப்பது போல் தெரிந்துள்ளது.

இதையும் படிங்க: போதையில் அம்மாவிடம் அனுதினம் தகராறு; தந்தையை கட்டையால் தாக்கி போட்டுத்தள்ளிய மகன்.!

Liquor Bottle

இறுதி கட்டத்தில் இருந்த மது வராததால் சந்தேகமடைந்த அவர், செல்போன் டார்ச்சை அடித்து பார்க்கையில் மதுபாட்டிலில் தவளை இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சக குடிமகன்கள் இடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

இதையும் படிங்க: திருச்சி: "போலீசை கூப்டு.. என்னடா பண்ணுவ?" - நடுரோட்டில் முதியவரின் நெஞ்சில் மிதித்து தாக்குதல்..!