போதையில் அம்மாவிடம் அனுதினம் தகராறு; தந்தையை கட்டையால் தாக்கி போட்டுத்தள்ளிய மகன்.!



  in Tirupattur Son Kills Father 

மதுபோதையில் அம்மாவிடம் தகராறு செய்த தந்தை, மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை, பாழ்நாங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, சார்ங்கபாண்டி என்ற மகன் இருக்கின்றனர். 

இதனிடையே, மது போதைக்கு அடிமையான ரவிக்குமார், எப்போதும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தில் அமைதியின்மை நிலவி வந்துள்ளது. 

இதையும் படிங்க: மருத்துவ செலவுக்கு பரிதவித்து, காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கணவனும் தற்கொலை.!

தந்தையை அடித்துக்கொன்ற தந்தை

இதனிடையே, சம்பவத்தன்று மதபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்த ரவிக்குமாரை, மகன் சார்ங்கபாண்டி கட்டையால் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

Murder

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தந்தையின் உடலை அவசர அவசரமாக நல்லடக்கம் செய்ய சாரங்கபாண்டி முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதன் பெயரின் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சாரங்கபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஓரினசேர்க்கையில் 10 வயது சிறுவன் கொடூர கொலை; கோவில்பட்டி துயரத்தில் பரபரப்பு தகவல் அம்பலம்.!