ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய பெண்ணுடன் கள்ளக்காதல்.. கர்ப்பமானதால் கொலை.. திருச்சியில் பயங்கரம்.!

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொத்தனார் கைது செய்ப்பட்டு இருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் இருந்த முட்புதரில் 40 வயது பெண்மணி கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினர், அங்கிருந்த கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட பெண், ஆணுடன் சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஆபிஸ் ஷட்டரை பூட்டி கணவரை பிரிந்த இளம்பெண் பலாத்காரம்; நிர்வாண போட்டோவை பகிர்ந்து பகிரங்க மிரட்டல்.!
அந்த நபர் யார் ? என விசாரித்த அதிகாரிகள், சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசித்து வந்த விக்னேஷ் (32) என்பவரை கைது செய்தனர். இவரை அதிகாரிகள் திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.
வேலைக்கு வந்த இடத்தில் பெண்ணுடன் பழக்கம்
விசாரணையில், ஸ்ரீரங்கம் பகுதியில் கொத்தனாராக விக்னேஷ் வேலை பார்த்து வந்தபோது, யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனிடையே, பெண்மணி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கருவை கலைக்க ரூ.13 ஆயிரம் பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பின் கருக்கலைப்பு தொடர்பாக விக்னேஷ் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இதனால் கடந்த பிப்.02 அன்று பெண்ணை சமயபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த விக்னேஷ், பின் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் உண்மையை அறிந்த காவல்துறையினர், கொத்தனார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "இயேசு அழைக்கிறார்" - 28 பேர் கும்பலை சிறைபிடித்த கிராம மக்கள்.. திருச்சியில் பரபரப்பு.!