ஆபிஸ் ஷட்டரை பூட்டி கணவரை பிரிந்த இளம்பெண் பலாத்காரம்; நிர்வாண போட்டோவை பகிர்ந்து பகிரங்க மிரட்டல்.!



in Trichy WOman Cheated By Man 

 

கணவரை பிரிந்து வாழ்ந்த கைப்பெண்ணை பலாத்காரம் செய்து சீரழித்து, அவருக்கு புதிய வாழ்வு கொடுக்கும் நல்லவன் போல அன்பை காண்பித்து மோசடி செய்த கயவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி, கடந்த 12 ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கு கணவர் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் பிரிந்தனர். திருமணமான இரண்டு ஆண்டுகளில், இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர், பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுள்ளார். 

இதையும் படிங்க: "இயேசு அழைக்கிறார்" - 28 பேர் கும்பலை சிறைபிடித்த கிராம மக்கள்.. திருச்சியில் பரபரப்பு.! 

இவர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது, உடன் பணியாற்றிய மனோஜ் என்பவர் பெண்ணிடம் நட்பாக பேசி இருக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி செயல்பட்டு வந்துள்ளனர். பெண்ணின் குடும்ப சூழ்நிலையை அறிந்துஇருந்த மனோஜ், பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். 

பாலியல் பலாத்காரம்

அதில் விருப்பம் இல்லாத பெண், தனக்கு திருமணம் வேண்டாம். குழந்தைகளுடன் நான் வாழ்ந்துகொள்கிறேன் என கூறியுள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று நிறுவனத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில், அறையை பூட்டி பெண்ணை மனோஜ் வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

trichy

நிர்வாண போட்டோ

பெண்மணி அழுது ஆட்பறித்தபோது, நான் உன்னையே திருமணம் செய்வேன். உன்னுடன் வாழ்வே இப்படி செய்தேன் என பேசி பெண்ணை அமைதிப்படுத்தி இருக்கிறார். அவ்வப்போது பெண்ணிடம் நிறுவன செலவுக்கு என ரூ.2 முதல் ரூ.3 இலட்சம் வரை பறித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பெண்ணுக்கு தொடர்புகொண்ட மனோஜின் நண்பர், உனது நிர்வாண வீடியோ என்னிடம் உள்ளது. மனோஜ் அனுப்பினார். நீ என்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என கூறியுள்ளார். 

பெண் குமுறல்

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெண்மணி, தனிமை காட்சியை எதற்கு அனுப்பினாய்? என கேட்டபோது, அப்படிதான் அனுப்புவேன், உனக்கு தொடர்புகொள்ளும் நபர்களுடன் சென்று படுக்கையை பகிரு என கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன இளம்பெண் திருச்சி மாநகர காவல் ஆணையர், கொள்ளிடம் காவல் நிலையம், ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். 

தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கண்ணீருடன் நடந்ததை பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க: திருச்சி: "ஐயா என்னை விட்ருங்க, உங்க கால்ல விழுறேன், மானம் போயிரும்" - பாலியல் தொல்லை கொடுத்து ஐயோ அம்மா கதறல்.!