விதவை பெண்ணிடம் ரூ.30 இலட்சம், 15 சவரன் நகைகள் மோசடி; அதிமுக, மூமுக கட்சி நிர்வாகிகள் கைது.!



in Trichy Thiruverumbur AIADMK MMK Party Members Arrested 

அப்பாவியின் பணத்தை சுருட்டி ஜாலி வாழ்க்கை வாழ்ந்த நிர்வாகிகள், கைம்பெண்ணை தாக்கி கொடுமை செய்தது நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பெல் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியவர் செல்வகுமார். இவரின் மனைவி ரேகா. கடந்த 2017ம் ஆண்டு செல்வகுமார் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் செட்டில்மண்ட் பணத்தை ரேகா வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். 

இரட்டிப்பு ஆசை

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அதிமுக திருச்சி புறநகர், தெற்கு மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ராஜா (39), மூவேந்தர் முன்னேற்ற கழகம் மாவட்ட நிர்வாகி சமுத்திர பிரகாஷ் (வயது 39) ஆகியோர் பெண்ணிடம் பேசியுள்ளனர். அவரின் வங்கியில் உள்ள பணத்தை இரட்டிப்பாகி தருகிறோம் என ரூ.30 இலட்சம், 15 சவரன் நகையை வாங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: திருச்சி: 15 வயது சிறுமி பலாத்கார முயற்சி; 40 வயது கூலித் தொழிலாளி கைது.!

trichy

ஏமாற்றம் & கைது

பின் அவர்கள் கூறியபடி பணம் இரட்டிப்பாகவில்லை. பணத்தை கேட்ட ரேகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்டையாலும் தாக்கி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து ரேகா துவக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் அதிமுக, மூமுக நிர்வாகி ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் மீது ஏற்கனவே மோசடி, கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
 

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் -கார் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி.. போதை அலட்சியத்தால் சோகம்.!