பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
காதல் திருமணம்.. மனைவி, 3 வயது குழந்தை மரணம்.. கணவரை நொறுக்கிய பெண் தரப்பு.!
5 ஆண்டுகளுக்குள் காதல் திருமணம் செய்த பெண், 3 வயது குழந்தை மர்ம மரணம் அடைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம், அலமேலு மங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், மனைவி நித்யா ஸ்ரீ. இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் 2 முறை குழந்தை பிறந்து இறந்த நிலையில், மூன்றாவதாக யோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு தற்போது 03 வயது ஆகிறது.
இதனிடையே, தம்பதிகளுக்குள் கடந்த சில மாதமாகவே குடும்ப தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவில் வீட்டிற்குள் நித்யா ஸ்ரீ, யோகேஸ்வரன் ஆகியோர் சடலமாக இருந்தனர். இதுகுறித்து நித்யா ஸ்ரீ உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நந்தகுமார் தரப்பில் எந்த விதமான தகவலும் கூறப்படவில்லை.
இதையும் படிங்க: தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.!
மகள்-பேரனை இழந்த துக்கம்
இதனால் தங்களின் மகள், பேரனை கொன்றதாக நித்யா ஸ்ரீயின் உறவினர்கள் நந்தகுமாரை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நந்தகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். உயிரிழந்த நித்யா ஸ்ரீ, யோகேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி இடையே, சில மாதங்களாக தகராறு நடந்து வந்ததாகவும், இதனால் கொலை நடந்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலையா? கொலையா? என காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. பெண்ணின் கழுத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காயம் இருப்பதால், பெண்ணின் தரப்பினர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!