சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!

கணவரிடம் இருந்து பிரிந்து இருந்த தாய்-மகன், விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, விஸ்வநத்தம், பெரியார் காலனியில் வசித்து வருபவர் கணேசன். இவர் பட்டாசுக்கடை வைத்து நடத்தி வருகிறார். கணேசனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
கருத்து வேறுபாடு
ராஜேஸ்வரி பட்டாசுக்கடையின் கணக்கு பணிகளை கவனித்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற 5 வயதுடைய மகன் இருக்கிறார். இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்காவை வழியனுப்ப வந்த 2 வயது தம்பி, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. தாய் கண்முன் பறிபோன உயிர்.!
செப்டிக் டேங்க் பள்ளம்
இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தாயின் வீட்டில் ராஜேஸ்வரி வசிக்கிறார். இவர்களின் வீடு அருகே, புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வீட்டின் முன்பக்கத்தில், செப்டிக் டேங்க்-க்கு பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. கனமழை காரணமாக அதில் நீர் தேங்கி இருந்தது.
காவல்துறை விசாரணை
இதனிடையே, தர்ஷன் பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற ராஜேஸ்வரியும் பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இருவரின் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!