நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
வேலூர்: கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்.!

பாலியல் தொல்லை விசயத்தில் சிக்கிய துணை முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவ-மாணவியர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வூர்ஹிஸ் (Voorhees College) என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உதவி முதல்வராக பொறுப்பில் இருப்பவர் அன்பழகன். இதே கல்லூரியில் 35 வயதுடைய பெண் கௌரவ விரிவுரையாளர் பணியாற்றி வருகிறார்.
பாலியல் தொல்லை
சம்பவத்தன்று பெண் விரிவுரையாளருக்கு அன்பழகன் பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த விஷயம் குறித்து பெண் விரிவுரையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரில், காவல் நிலைய ஆய்வாளர் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: நிச்சயம் முடிந்த மகளின் திருமணத்துக்கு எடுக்கப்பட்ட 40 சவரன் நகைகள் கொள்ளை; வேலூரில் அதிர்ச்சி.. பெற்றோர் கண்ணீர்.!
இந்த விசாரணையைத் தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு, பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவல் தெரியவந்தது.
மாணவ-மாணவிகள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த மாணவ - மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர், கல்லூரியில் போராட்டம் செய்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாகவும் கூறினர். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் மெயின் கதவுக்கு பூட்டு போட்டது. ஆனால், அதனை உடைத்து மாணவர்கள் வெளியேறினர்.
கல்லூரியில் இருந்து வெளியேறிய மாணவர்கள், நேரடியாக வேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகைப்போராட்டம் நடத்தினர். காவல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மாணவ-மாணவிகள் களைந்து சென்றனர்.
இதையும் படிங்க: வேலூர்: 13 வயதுடைய சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி.. கணையம், சிறுநீரகம், நுரையீரல் செயலிழந்து சோகம்.!