நிச்சயம் முடிந்த மகளின் திருமணத்துக்கு எடுக்கப்பட்ட 40 சவரன் நகைகள் கொள்ளை; வேலூரில் அதிர்ச்சி.. பெற்றோர் கண்ணீர்.!



in Vellore Katpadi Gold Jewel Stolen 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 59). இவர் தனது வீட்டின் அருகிலேயே பலசரக்குக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 

முதல் மகளுக்கு திருமணம் முடிந்தவிட்ட நிலையில், இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்து, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கின்றன. திருமணத்துக பட்டுப்புடவை வாங்க, ராஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் நேற்று சென்னைக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: வேலூர்: 13 வயதுடைய சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி.. கணையம், சிறுநீரகம், நுரையீரல் செயலிழந்து சோகம்.!

vellore

பின் மீண்டும் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த நிலையில், அங்கு வீட்டின் கதவு வெல்டிங் வைத்து அறுக்கப்பட்டு போல இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த காட்பாடி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இரண்டாவது மகளின் நிச்சயதார்தத்துக்கு வாங்கி வைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகைகள், அரைகிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை மாயமாகியது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: பண்ரூட்டி: பணிக்கு புறப்படும்போது நேர்ந்த சோகம்; உதவி ஆய்வாளர் மாரடைப்பில் மரணம்.!