கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரிப்பனில் இரத்தக்கறை.. இறந்த குழந்தையின் உடலை வைத்து நாடகம்?.! சிக்கிய புதிய சிசிடிவி காட்சி.!!
விக்ரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் தனியார் பள்ளியில், மூன்றரை வயதுடைய சிறுமி லியா லட்சுமி, யுகேஜி பயின்று வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, சிறுமி உணவு இடைவேளைக்கு பின்னர், தனியாக கழிவறை சென்றதாகவும், அதனால் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகம் எதையோ மறைகிறது என சிறுமியின் பெற்றோர்-உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதிர்ச்சி திருப்பம்
இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக புதிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, இறந்த குழந்தையின் உடலை தூக்கிகொண்டு அலைந்து, சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து பலியானதாக நடமாடியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மலையில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்; பரிதாப பலி.!
மேலும், பள்ளியின் வகுப்பு ஆசிரியை சிறுமியை தாக்கியதாகவும், சிறுமியுடன் படித்த தோழி ஒருவர், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் சிறுமியின் ரிப்பனில் இரத்தக்கறை இருந்தது தொடர்பாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல் துறை அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும் லியா லட்சுமியின் பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
விழுப்புரம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் ஏற்கனவே இறந்த குழந்தையை வைத்து நாடகம் நடத்தியுள்ளனர் என்பது CCTV யில் வெளியானது!
— priya (@PriyankaSmile01) January 11, 2025
அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும்..அவர்கள் அனைவரும் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும்.😡@tnpoliceoffl @vpmpolice @Anbil_Mahesh @CMOTamilnadu pic.twitter.com/qngUuwlUHg
இதையும் படிங்க: எலுமிச்சை பறிக்கச் சென்று உயிரைவிட்ட பெண்; அலட்சிய அதிகாரிகளால் திருவள்ளூரில் சோகம்.!