எலுமிச்சை பறிக்கச் சென்று உயிரைவிட்ட பெண்; அலட்சிய அதிகாரிகளால் திருவள்ளூரில் சோகம்.!



  in Thiruvallur 44 Year Old Girl Dies 

திருவள்ளூர் மாவட்டம், வராதாபுரம் பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். இவரின் மனைவி லோகேஸ்வரி (44). இவர்களின் வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், நேற்று எலுமிச்சை பறிக்க லோகேஸ்வரி சென்றார். 

அப்போது, கம்பியை பயன்படுத்தி எலுமிச்சை பறிக்க முற்பட, அதன் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியின் மீது லோகேஸ்வரியின் மின்கம்பிபட்டுள்ளது. 

death

மின்சாரம் பாய்ந்து சோகம்

இதில் லோகேஸ்வரியின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: குளிருக்கு மூட்டிய தீ துணியில் பற்றி மூதாட்டி பலி; நொடியில் நடந்த சோகம்.!!

மின்வாரிய ஊழியர்களிடம் தாழ்வாக செல்லும் மின்கம்பி குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க: இராமநாதபுரம்: முதலுதவி கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் பறிபோன உயிர்.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.!