மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண வீட்டில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை; இளைஞர் போக்ஸோவில் கைது.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர், தனது உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக விழுப்புரத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு சிறுமியை அழைத்த இளைஞர் ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.
இதனால் பதறிப்போன சிறுமி, வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்து இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 5 நாட்களில் 17 வயது சிறுமி மர்ம மரணம்; திண்டிவனத்தில் சோகம்.!
இளைஞர் போக்ஸோவில் கைது
விசாரணையில், திருமணத்திற்கு வருகை தந்திருந்த இளந்தமிழன் என்ற இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகவே, அவரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருமண வீட்டார் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு எங்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சூழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனிமனித ஒழுக்கமின்மை, கடுமையான தண்டனைகள் இல்லாதது போன்றவையே இதுபோன்ற விஷயங்களுக்கு காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரம்: காதலர் நாளிதழில் வித்தியாசமான திருமண வரவேற்பு; கவனத்தை ஈர்த்த இளைஞர்களின் போஸ்டர்.!