மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த 5 நாட்களில் 17 வயது சிறுமி மர்ம மரணம்; திண்டிவனத்தில் சோகம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், புளியனூர் கிராமத்தில் 55 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவரின் 17 வயது மகள் கன்னியம்மாள். இவர் திண்டிவனம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
காதல் திருமணம் செய்ததாக தகவல்
இதனால் மகளை பல இடங்களில் தேடியும் காணாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, அங்குள்ள நடுவந்தல் கிராமத்தில் வசித்து வரும் 21 வயது இளைஞர் அஜித், கன்னியம்மாளின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு, "தான் உங்களின் மகளை காதலித்து வருகிறேன். இருவரும் திருமணம் செய்துகொண்டோம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரம்: காதலர் நாளிதழில் வித்தியாசமான திருமண வரவேற்பு; கவனத்தை ஈர்த்த இளைஞர்களின் போஸ்டர்.!
பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த காதலன்
திண்டிவனம் அருகில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட ஜோடி, சில நாட்கள் அஜித்தின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்.
சிறுமி தற்கொலை
வீட்டில் இருந்த சிறுமி திடீரென அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. அவரின் சடலம் கிணற்றுக்குள் மிதப்பதை கண்ட சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த காதலனான அஜித் கைது செய்யப்பட்டார். சிறுமியின் தற்கொலை வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கதறி துடித்த மாணவி... கருணை இல்லாத ஆசிரியர்... தொடர் பாலியல் தொல்லை.!! பதறிய பெற்றோர்.!!