16 வயது சிறுவன் செய்யிற வேலையா இது? நிதிநிறுவன ஊழியரிடம் லிப்ட் கேட்டு வழிப்பறி.. மூவர் கைது.!



in Viluppuram 3 Arrested Robbery Case 

 

16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கும்பல் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் வனப்பகுதி வழியே, தனியார் நிதி நிறுவன ஊழியர் ஸ்டீபன் வசூல் செய்யப்பட்ட பணம் ரூ.26 ஆயிரத்துடன் சம்பவத்தன்று பயணம் செய்துகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: நா.த.க-வில் அடுத்த சம்பவம்.. பதவி விலகினார் மா.செ.. அதிர்ச்சியில் சீமான்.!

அச்சமயம், அங்கு நடுவழியில் 16 வயது சிறுவன் ஒருவர் லிப்ட் கேட்ட நிலையில், ஸ்டீபனும் சிறுவனுக்கு உதவி இருக்கிறார். பின் சிறுவன் ஓரிடத்தில் நிறுத்திச் சொல்ல, அங்கு முன்னதாகவே தயாராக இருந்த இருவர் கும்பல் ஸ்டீபனை சுற்றி வளைத்தது. 

Viluppuram

பீர் பாட்டிலால் தாக்கி வழிப்பறி 

பீர் பாட்டிலால் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின் பொதுமக்கள் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித்தார். 

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள், 16 வயது சிறுவன் என மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: பெண்ணின் காதை அறுத்து கம்மல் திருட்டு; ஒரே வீட்டில் இரண்டு முறை கொள்ளை.. திருட்டுச் சம்பவத்தால் குடும்பமே அதிர்ச்சி.!