மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் மாமன் பொண்ணு மேல ஆசையா?.. 21 வயது இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற ரௌடி.. விருதுநகரில் பயங்கரம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள டி கல்லுப்பட்டி, வி. வெங்கடாசலபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 25). உள்ளூரில் ரௌடிபோல வலம்வந்த இவர், தனது தாயாரின் பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, கோவிலான்குளம் பகுதிக்கு அவ்வப்போது சென்றுவருவார். அந்த சமயத்தில், அவ்வூரை சேர்ந்த அழகேந்திரன் (வயது 21) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அழகேந்திரன் பிரபாகரனின் தாய்மாமா மகளை காதலிக்கவே, இந்த விவகாரத்தை அறிந்த பிரபாகரன் மற்றும் பெண்ணின் தந்தை அழகேந்திரனை கண்டித்து இருக்கின்றனர். இதனை கண்டுகொள்ளாத அழகேந்திரன் காதலை தொடர்ந்து இருக்கிறார். இதனையடுத்து, அவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவில் அழகேந்திரனை பிரபாகரன் கள்ளிக்குடி பகுதிக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அந்த கோலத்தில் கண்டு கண்டித்த மாமியார்.! கொன்று எரித்த மருமகள்.! நடந்த பகீர் சம்பவம்!!
தலை துண்டித்து கொடூர கொலை
அழகேந்திரனுக்கு அதிக மதுவை கொடுத்து போதை ஏறவைத்த பிரபாகரன், பட்டாகத்தியால் அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். மேலும், அவரின் கை விரல்களை வெட்டியதோடுமட்டுமல்லாது, தலையை துண்டித்து வீசி இருக்கிறார். பின், அவருக்கும் போதை அதிகமாகி அங்கேயே மட்டையாகி இருக்கிறார். மறுநாள் காலையில் வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி சரணடைந்தார்.
பின் இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அழகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரபாகரனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இதனிடையே, மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த அழகேந்திரனின் தாய் & குடும்பத்தினர், மகனின் உடலை பெற மறுத்தனர். மேலும், மகன் காதலித்த பெண்மணி வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்.
இதனால் தனது மகனை அவர்கள் ஆணவப்படுகொலை செய்துவிட்டனர் என கூறி இருக்கின்றனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதான பிரபாகரனின் மீது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட 10 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. குண்டர் சட்டத்திலும் ஏற்கனவே கைதாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஏரிக்கரையில் சரக்கடித்த நண்பர்களுக்குள் தகராறு; நண்பனை போட்டுத்தள்ளிய பயங்கரம்.!