சென்னை விமான நிலைய திக்., திக் காட்சிகள்.. புயல் மழைக்கு நடுவே தரையிறங்க முற்பட்டு, மீண்டும் பறந்த விமானம்..! 



Indigo Flight Chennai Runway Bad Weather Touchdown & takeoff 

மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்று, விமானியின் சாதுர்ய செயலால் விபத்தில் இருந்து தப்பியது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பெஞ்சல் புயலாக வலுப்பெற்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையானது பெய்தது.

சென்னை விமான நிலையம்

சூறைக்காற்று, தரைக்காற்று என புயலின் தாக்கம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை கடுமையாக பாதித்து. இதன் காரணமாக சென்னை நகரில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் காற்று போன்ற வானிலைகளால், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் சில மணி நேரங்கள் வரை மூடப்பட்டது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!

விமானத்தின் பகீர் காட்சிகள்

விமானிகள் விமானத்தை தரையிறக்க இயலாமலும் அவதிப்பட்டனர். அந்த வகையில், இண்டிகோ நிறுவனத்தில் போயிங் ரக விமானம் A320 6E 683, மும்பையில் இருந்து சென்னை வந்தது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, காற்றின் வேகத்தால் பாதிக்கப்பட்டு, பின் விமானியின் அதிரடி செயலால் மேல்நோக்கி பறந்து பயணிகளின் உயிர்தப்பிய பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!