Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!



Fengal Cyclone Suck the Water from Cuddalore Seashore 

 

வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெஞ்சல் புயலாக மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, மரக்காணம் - புதுச்சேரி நடுவே கரையை கடந்தது. இந்த புயலின் காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியது.

வெள்ளத்தின் பிடியில் விழுப்புரம் மாவட்டம்

புயல் கரையை கடந்தபின்னரும் பெய்த மழை காரணமாக, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. சங்கராபரணி, கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கடலூர், புதுவை நகரங்களை நீரில் தத்தளிக்க வைத்துள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: 4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கும், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீரை உறிஞ்சும் புயல்

இதனிடையே, புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக, புயலின் மேகங்கள் காற்று சூழலை உருவாக்கி நீரை உறிஞ்சும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ கடலூரில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதன் உண்மை பின்னணி தெரியவில்லை. வீடியோ வைரலாகி வருகிறது. 


இதையும் படிங்க: #Breaking: விழுப்புரத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக வெளியானது அறிவிப்பு.!