திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பியோடிய 2 இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சக தொழிலாளியுடன் கள்ளக்காதல்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகள்மங்கலம் அருகே உள்ள புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிடத் தொழிலாளியான இவர் தூத்துக்குடியில் கட்டிட வேலைக்கு சென்றருக்கிறார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த பழனியாச்சி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பழனியாச்சிக்கு ஏற்கனவே திருமணமாகி கருப்பசாமி என்ற கணவன் இருக்கும் நிலையில் அவர் ஈஸ்வரனுடன் கள்ளக்காதலில் இருந்திருக்கிறார்.
கள்ளக்காதலில் தகராறு
ஈஸ்வரன் மற்றும் பழனியாச்சி ஆகியோர் தூத்துக்குடியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கள்ளக்காதல் ஜோடிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊர் திரும்பிய ஈஸ்வரன் தாயுடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் பழனியாச்சி பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தும் ஈஸ்வரன் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனியாச்சி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: உயிரை கொன்ற மது பழக்கம்.. மகளை அசிங்கமாக பேசிய தந்தை.!! 14 வயது சிறுமியின் விபரீத முடிவு.!!
பஸ் ஸ்டாண்டில் கொலை வெறி தாக்குதல்
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரனை வடசேரி பேருந்து நிலையத்திற்கு வருமாறு பழனியாச்சி அழைத்திருக்கிறார். இதனையடுத்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ஈஸ்வரனை அங்கு மறைந்திருந்த 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஈஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குற்றவாளிகளுக்கு வலை வீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஈஸ்வரனிடம் நடத்திய விசாரணையில் பழனியாச்சி ஆட்களை வைத்து ஈஸ்வரனை வெட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பதுங்கி இருந்த பழனியாட்சியை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ஈஸ்வரனை தாக்கி விட்டு தலைமறைவாக இருக்கும் 2 இளைஞர்களை தனிப்பட போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!