சாம்சங் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் விபத்து: காவலரை தள்ளிவிட்ட ஊழியர்கள்.. பகீர் வீடியோ.!



Kanchipuram Samsung Workers Protest SSI Manikandan Attacked by Gang 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில், சாம்சங் செல்போன் & உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் சிஐடி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குதல் உட்பட 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் 3 அமைச்சர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இதையும் படிங்க: கோக்கில் கிடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. உயிர் பயத்தில் இளைஞர்.!

விபத்தில் சிக்கிய வாகனம்:
இதனால் இன்று காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சுமார் 12 க்கும் மேற்பட்டோர் லோடு ஆட்டோவில் பயணம் செய்தனர். அப்போது, இவர்கள் பயணித்த வாகனம் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 12 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், 4 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு காவல்துறை பாதுகாப்பு பணியும் வழங்கப்பட்டது.

எஸ்எஸ்ஐ மீது தாக்குதல்

சக ஊழியர்கள் விபத்தில் சிக்கியதை அறிந்து பலரும் அங்கு மீட்க வந்த நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவரும் நிகழ்விடத்தில் பணியில் இருந்தார். அவர் அங்கு நடக்கும் நிகழ்வுகளை செல்போனில் வீடியோ எடுத்தார். 

அச்சமயம், அங்கு இருந்த சில ஊழியர்கள் சேர்ந்து அவரை கீழே தள்ளிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது. தங்களின் பணிக்காக நடக்கும் போராட்டத்தில் ஏற்கனவே சம்பளத்தை இழந்து நிற்கும் ஊழியர்கள், தற்போது எஸ்எஸ்ஐ மீதும் கைவைத்து இருக்கின்றனர். 

லோடு ஆட்டோ விபத்திற்குள்ளான காட்சி

எஸ்எஸ்ஐ மீது தாக்குதல்

இதையும் படிங்க: காஞ்சிபுரம்: அக்கா-தம்பி பாலியல் பலாத்காரம்.., 5 வயது சிறுவனை கொன்ற காம சர்வேயர்.. தமிழகமே பேரதிர்ச்சி.!