53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
காஞ்சிபுரம்: அக்கா-தம்பி பாலியல் பலாத்காரம்.., 5 வயது சிறுவனை கொன்ற காம சர்வேயர்.. தமிழகமே பேரதிர்ச்சி.!
நம்பிக்கையின் பேரில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கிய நிலையில், வக்கிர எண்ணம் கொண்ட நபரால் நடந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை, தணிகைவேல் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 34). இவர் காஞ்சிபுரம் சர்வே துறையில் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேஷுக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பிளஸ் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.!! வரலாற்று ஆசிரியர் கைது.!!
துணையை பிரிந்து வாழும் நபர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மூதாட்டி ஒருவர் தனது 30 வயது மகளுடன் டிபன் கடை நடத்தி வருகிறார். 30 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் தனது கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.
தினமும் அங்கு சாப்பிட சென்று வந்த ராஜேஷ், பாட்டி மற்றும் அவரின் குடும்பத்தாருடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு பேசி வந்துள்ளார். மேலும், பெண்ணும் தனது குழந்தைகளுடன் ராஜேஷ் பழகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று வரவும் அனுமதித்து இருக்கிறார்.
சிறுவன், சிறுமி பலாத்காரம்
இதனிடையே, கடந்த செப்.28 ம் தேதி அன்று மதியம் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ராஜேஷ், பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது. இந்த விசயத்திற்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை தாக்கியதில், அவர் மயங்கி இருக்கிறார். மயக்க நிலையில் இருந்த சிறுவனை, உறங்கிக்கொண்டு இருப்பதாக கூறி ராஜேஷ் பெண்ணின் வீட்டில் குழந்தைகளை விட்டுச்விட்டு சென்றுள்ளார்.
உண்மை அறியாத தாய்
விபரீதம் புரியாத பெண்ணும் ராஜேஷ் மீது இருந்த நம்பிக்கையால் மகன் தூங்குவதாக எண்ணியுள்ளார். மறுநாள் விடிந்தபின்னரும் மகன் எழுந்துகொள்ளாததால், பதறியபடி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் பெண்மணி 9 வயது மகளிடம் விசாரித்து இருக்கிறார்.
குற்றவாளி கைது
அச்சமயம் ராஜேஷ் தன்னிடமும், தம்பியிடமும் நடந்துகொண்ட முறையை சிறுமி விவரித்துள்ளார். மேலும், தம்பியை ராஜேஷ் தாக்கியதாகவும் கூற, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற அதிகாரிகள் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ராஜேஷை கைது செய்து நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ராஜேஷை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கதறி துடித்த மாணவி... கருணை இல்லாத ஆசிரியர்... தொடர் பாலியல் தொல்லை.!! பதறிய பெற்றோர்.!!