மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை இல்லாதது தொடர்பாக அவதூறு பேசிய தந்தை; நண்பர்கள் உதவியுடன் போட்டுத்தள்ளிய மகன்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது, தற்போது வரை குழந்தை இல்லை.
இவரின் தந்தை பிரபாகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அவரின் மரணத்திற்கு பின்னர் உடலில் வெட்டுக்காயம் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது. பிரபாகரனின் மகன் அனீஸ் குமார், அவரின் நண்பர்கள் சுதன், ராஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தந்தை குழந்தை இல்லாதது தொடர்பாக அவதூறு பேசிய காரணத்தால், ஆத்திரத்தில் நண்பர்கள் உதவியுடன் அவரை அனீஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.