செயின் பறித்தவர், ஜாதி வெறியருக்கு தவெக மாவட்ட செயலாளர் பொறுப்பு? - நிர்வாகிகள் குமுறல்.!



Kanyakumari TVK Party District Secretary 

 

குமரி மாவட்ட தவெகவினர், கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதிய சம்பவம் நடந்துள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து நகர்ந்து வரும் தமிழக வெற்றிக்கு கழகத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனத்தில், உட்கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது.

இதையும் படிங்க: போதையில் தந்தை அடித்துக்கொலை; மனைவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்.. நடந்தது என்ன?

இந்நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளராக ஷபின் என்பவர் நியமனம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த தவெக நிர்வாகிகள், தங்களின் எதிர்ப்பை கடிதம் ஒன்றின் வாயிலாகவும் தெரிவித்து இருக்கின்றனர். 

குற்றவழக்கில் தொடர்புடையவர், ஜாதி வெறியர் 

இதுதொடர்பாக அம்மாவட்ட தவெக கட்சியின் நிர்வாகி சிவா என்பவர், ஷபின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருக்கின்றன. அவர் 2018ம் ஆண்டு காவலரை தாக்கியதில் முக்கிய குற்றவாளி. தென்மாவட்டத்தில் தவெக அமைப்பை கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கிறார். 

உச்சகட்ட ஜாதி வெறி கொண்ட நபர் ஷபின். அவருக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது எப்படிப்பட்டது?. இந்த விஷயமெல்லாம் விஜய்க்கு தெரியாது. கட்சியின் செயல்பாடுகள் வரவர சரியில்லை என கூறி இருக்கிறார். இதுதொடர்பான ஆடியோ மற்றும் கடிதம் வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

சபினுக்கு எதிராக சிவாவின் கடிதம்

 
 

 

 

இதையும் படிங்க: "உங்க கூட பேசணும்" - இளைஞரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்; குமரியில் பகீர் சம்பவம்.!