53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வாட்சை எடுத்து வைத்திருந்ததால் ஆத்திரம்.. மாணவியை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய பிஇடி ஆசிரியர்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், ஓசூர் - பாகலூர் சாலையில், அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த அக்.23 அன்று மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஒசூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டுள்ளனர். அச்சமயம், அங்கு வந்திருந்த தனியார் பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரின் கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு பைக்கில் ட்ரிப்பிள்ஸ்.. கண்டைனர் லாரி மோதி நண்பர்கள் மூவரும் பலி.. நொடியில் சோகம்.!
ஆசிரியை கண்டிப்பு
மாணவி கீழே கிடந்த கைக்கடிகாரத்தை எடுத்து வைத்திருந்தாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைக்கடிகாரத்தை இழந்த ஆசிரியை, சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் பயிற்சியாளரை கடுமையாக கடிந்துக்கொண்டுள்ளார்.
வசைபாடல் தொடர்ச்சி
மேலும், தனியார் பள்ளியின் பயிற்சியாளர், புதிய கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். சமாதானம் அடையாத ஆசிரியை, மாணவியை தொடர்ந்து வசைபாடி இருக்கிறார்.
வீடியோ வைரல்
இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த பயிற்சியாளர் மாணவியின் தாயிடம் விஷயத்தை தெரியப்படுத்தி, மாணவியை பொதுவெளியில் வைத்து சரமாரியாக தாக்கி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி கண்டனத்தை குவித்துள்ளது.
மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர் #Hosut | #Students | #Teacher | #VelichamTV pic.twitter.com/Z7zNd0OyC2
— Velicham TV (@velichamtvtamil) October 28, 2024
வீடியோ நன்றிவெளிச்சம் டிவி
இதையும் படிங்க: மருமகளை மனைவியாக்க Ex. ஆர்மி ஸ்கெட்ச்; கணவனுக்கு நேர்ந்த படுபயங்கரம்.. நடுநடுங்க வைக்கும் கொலை.!