#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு பைக்கில் ட்ரிப்பிள்ஸ்.. கண்டைனர் லாரி மோதி நண்பர்கள் மூவரும் பலி.. நொடியில் சோகம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் வசித்து வருபவர்கள் ராகுல், விஜய், வசந்த் குமார். இவர்கள் மூவரும் அரூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி, சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தனர்.
அச்சமயம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி கண்டைனர் லாரி ஒன்று வந்தது. இந்த இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான கார்; 2 பெண்கள் பரிதாப பலி.!
நண்பர்கள் மூவரும் விபத்தில் மரணம்
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், விஜய் மட்டும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜய் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே விபத்தில் நண்பர்கள் மூவரும் உயிரிழந்த விஷயம் குறித்து காவேரிப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிரிழந்தோரில் ராகுல் கல்லூரி மாணவர் ஆவார், பிற இருவரும் ஓட்டுனர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: வேகத்தடையால் நிகழ்ந்த சோகம்; லாரி சக்கரத்தில் சிக்கி மகன், பேரன் கண்முன் தலை நசுங்கி பெண் பலி.!