என்னது! லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் திருடிய நகைகளை இங்கேதான் வைப்பாரா? அவரது மனைவியே கூறிய அதிர்ச்சி தகவல்!!



lalitha-jewellery-robbery-leader-murugan-wife-talk-abou

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதியன்று, கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அந்த கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

இதனை தொடர்ந்து 7 பேர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் நடைபெற்றது. அப்பொழுது  வாகன சோதனையின் போது மணிகண்டன் என்பவரை போலீசார் திருவாரூரில் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களை தொடர்ந்து சுரேஷ் என்பவர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். பின்னர் இந்த கொள்ளைக்கான முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

lalitha jewellery

இதனை தொடர்ந்து முருகன் கொள்ளையடித்த நகைகளை வேறு எந்த இடத்திலாவது வைத்துள்ளாரா என அவரது மனைவி மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகுதான் எனது கணவர் திருட்டு தொழில் செய்பவர் என்பது எனக்கு தெரியவந்தது. மேலும் அவர் திருட்டுகாரியத்தில் ஈடுபட்டாலும் கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் அடிக்கடி கோவிலுக்கு செல்வார்.

மேலும் எனது கணவர் கொள்ளையடிக்கும் நகைகளை யாரிடமும் கொடுக்கமாட்டார், பூமியில் குழிதோண்டி அதில் புதைத்து வைப்பார். ஆனால் நகைகளை எங்கு புதைத்து வைப்பார் என்பது அவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. பின்னர் அவருக்கு பணம் தேவைப்படும் போது அதனை எடுத்து மாற்றி செலவிடுவார் அதுமட்டுமின்றி அவ்வாறு மாற்றும் பணத்தை  அவர் வீட்டில் உள்ள பெரிய டிரம்மில் ரகசியமாக வைப்பார் என கூறியுள்ளார்.