மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீராத கடன் தொல்லை.. தாய் மற்றும் மகன் எடுத்த விபரீத முடிவு!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சடவிளை தெருவில் வசித்து வருபவர் பிரதீப். இவரது தாயார் விலாசினி மற்றும் பிரதீப் இருவரும் சேர்ந்து உடுப்பட்டி சாம்பிராணி வாசனை திரவியங்களை மொத்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடும் கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினருக்கு பிரதீப் போன் செய்து, நானும், அம்மாவும் சாகப் போகிறோம். என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விரைந்து உறவினர்கள் வந்து பார்த்தபோது தாயும், மகனும் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.