கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கள்ளக்காதலி வீட்டுக்கு ஆசையாக சென்ற டிரைவர்.! அலறி அடித்து அரங்கேறிய சம்பவம்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே 39 வயதான ஜோதி என்ற பெண் பத்து ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்துள்ளார். அவர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு வெங்கடேஷ் என்ற 40 வயது லாரி டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்.
இருவரது பழக்கம் நாளடைவில் நெருக்கமான நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வழக்கம் போல ஜோதி வீட்டுக்கு நேற்று முன் தினம் வெங்கடேஷ் சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அங்கே வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் மிகுந்த காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணத்திற்காக ஜோதி அவரை கட்டையால் அடித்து கொலை செய்தார் என்பது இன்னமும் தெரியவில்லை.