மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!
பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப காவலர் விபத்தில் மரணம் அடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மாத்தூர், அப்பன் திருப்பதி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது 49). இவர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பட்டாலியனில் உதவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: 100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.!
நேற்று வழக்கம்போல பணிக்கு வந்தவர், பின் பணியை முடித்துக்கொண்டு காரில் மதுரையில் உள்ள வீட்டிற்கு செல்ல இராஜபாளையம் - மதுரை சாலையில் பயணம் செய்துள்ளார்.
காவலர் பலி
இவரின் கார் எம். சுப்பலாபுரம் பகுதியில் வந்தபோது, சிமெண்ட் பாரம் ஏற்றிவந்த லாரி, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காவலர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!