ஷூ லேஷில் கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை; கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கோரேகான் பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயதுடைய சிறுமி, பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடைய, இன்று உனவு இடைவேளைக்கு பள்ளியின் கழிவறைக்கு சென்ற சிறுமி, ஷூ லேசாய் கழுத்தில் கட்டி தற்கொலை செய்துகொண்டார். மாணவி நீண்ட நேரம் ஆகியும் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்கிப்போச்சு.. டூவீலரில் மின்னல் வேகம்.. லாரியில் மோதி இளைஞர்கள் பரிதாப பலி.!
காவல்துறையினர் விசாரணை
இதனால் சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகத்தினர், கழிவறைக்கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, மாணவியின் சடலம் கிடந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்கிப்போச்சு.. டூவீலரில் மின்னல் வேகம்.. லாரியில் மோதி இளைஞர்கள் பரிதாப பலி.!