ஈரக்குலையே நடுங்கிப்போச்சு.. டூவீலரில் மின்னல் வேகம்.. லாரியில் மோதி இளைஞர்கள் பரிதாப பலி.!



in Mumbai Aarey Colony Bike Accident 2 Died Shocking Video Here 

 

பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முயன்ற இளைஞர்கள், எதிர்திசையில் வந்த லாரியில் நேருக்கு நேர் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், ஸ்டண்ட் செய்தபடி அதிவேகத்தில் பயணித்த காரணத்தால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஆரெ காலனி பகுதியில், நேற்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல எதிர்திசையில் பயணித்தபோது, எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. 

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!

இருவர் நிகழ்விடத்திலேயே பலி:
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரெ காலனியில் உள்ள பிகினிக் பாயிண்ட் பகுதியில், நேற்று இரவு 10:30 மணியளவில் நடந்த விபத்தில் இளைஞர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். இருவரும் அதே பகுதியில் வசித்து வருபவர்கள் ஆவார்கள்.  

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அதிவேகம் காரணமாக விபத்து நடனத்து உறுதியானது. 

நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

இதையும் படிங்க: மகளுக்கு உணவு கொடுத்த 10 நிமிடத்தில் தலை நசுங்கி உயிரிழந்த தந்தை; வழக்கறிஞருக்கு லாரியில் வந்த எமன்.!