மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உடம்பெல்லாம் எரியுது காப்பாத்துங்க.." கட்டி அனைத்தபடி கதறிய பெண்.!! கணவன் வெறி செயல்.!!
ஸ்ரீ பெரும்புதூரில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவன் தீவைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியாக வசித்து வந்த 2 குழந்தைகளின் தாய்
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா(32). இவருக்கும் பாலாஜி என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த சித்ரா தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
முகமூடி அணிந்து வந்து மனைவியை கொல்ல முயற்சி
இந்நிலையில் நேற்று இரவு சித்ரா தனது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சித்ராவின் மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கதறி துடித்த சித்ரா தன் மீது பெட்ரோல் ஊற்றிய நபரை கட்டி அணைத்தபடி காப்பாற்றுங்கள் என கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரது உடலிலும் பற்றி எரிந்த தீயை அணைத்து அவர்கள் இருவரையும் காப்பாற்றினர். பின்னர் முகமூடியை அகற்றி பார்த்தபோது சித்ராவை கொலை செய்ய முயன்ற நபர் அவரது கணவன் என தெரிந்தது.
இதையும் படிங்க: "வீட்டுக்கு வா வேலை வாங்கி தரேன்.." இளம் பெண் மீது பாலாத்கார முயற்சி.!! பேராசிரியர் கைது.!!
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதன் பிறகு தீக்காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் காயம் அடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியைப் பிரிந்து சென்ற கணவன் திடீரென வந்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "லைஃபை தொலைச்சிட்டியே.." உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.!! ஐடி ஊழியர் தற்கொலை.!!