மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வீட்டுக்கு வா வேலை வாங்கி தரேன்.." இளம் பெண் மீது பாலாத்கார முயற்சி.!! பேராசிரியர் கைது.!!
கோவையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சான்றிதழ்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரி பேராசிரியர்
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். 45 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரிடம் கல்லூரியில் படித்த இளம் பெண் ஒருவர் தனது சான்றிதழ்கள் தொடர்பாக பேராசிரியரின் உதவியை நாடி இருக்கிறார்.
பலாத்கார முயற்சி
பேராசிரியர் சிவப்பிரகாசத்திடம் படித்த முன்னாள் மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் தனது சூழ்நிலை காரணமாக அவர் வேலையை ராஜினாமா செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் அவரது சான்றிதழ்களை கொடுக்க மறுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேராசிரியரிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் சான்றிதழ்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: "லைஃபை தொலைச்சிட்டியே.." உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.!! ஐடி ஊழியர் தற்கொலை.!!
தோழியின் உதவியுடன் தப்பிய இளம் பெண்
அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம் பெண் வீட்டின் குளியலறையில் மறைந்திருந்து தனது தோழியை தொடர்பு கொண்டு நடந்த கொடுமைகள் குறித்து தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் தோழி புகார் செய்துள்ளார். அவரது புகாரை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் பேராசிரியரின் வீட்டிற்கு சென்று இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து பேராசிரியரை கைது செய்த காவல்துறையினர் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "என் ஆளு மேலயே கைய வைப்பியா.." காதலியின் தந்தை மீது தாக்குதல்.!! ரவுடி உட்பட இருவர் கைது.!!