திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயங்கரம்... 3 லட்ச ரூபாய் பணத்திற்காக தந்தை படுகொலை.!! மகன் வெறி செயல்.!!
மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பிக் கொடுக்காததால் 60 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுக்கல் வாங்கல் தகராறு
மதுரை நகரில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது தந்தை லோகநாதன்(60). தீபாவளிக்கு சீட்டு பிடித்ததில் கார்த்திக்கிற்கு 3 லட்ச ரூபாய் கிடைத்திருக்கிறது. இந்தப் பணத்தை கார்த்திக் தனது தந்தை லோகநாதனுக்கு கடனாக கொடுத்திருக்கிறார். இந்நிலையில் மகனிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்திருக்கிறார் லோகநாதன். இது தொடர்பாக தந்தை மற்றும் மகனிடையே பகை நிலவி வந்திருக்கிறது.
கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை
பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் திருப்பி தராததால் தனது தந்தையிடம் பணத்தை கேட்டிருக்கிறார் கார்த்திக். இதனால் கார்த்திக் மற்றும் அவரது தந்தை இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது தந்தை என்றும் பாராமல் லோகநாதனின் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார் கார்த்திக்.
இதையும் படிங்க: தீபாவளி புத்தாடை விவகாரம்.!! தற்கொலை செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!!
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கார்த்திக் வீட்டிற்கு சென்று கொலை செய்யப்பட்ட லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் சரணடைந்த கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தகராறில் சொந்த தந்தையே கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: சென்னை ஐடி பெண் கத்தி முனையில் பலாத்காரம்.!! ஆட்டோ டிரைவர் தலைமறைவு.!!