மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சுத்தியலால் ஒரே அடி.." மகன் கண் முன்னே உல்லாசம்.!! தாயின் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம் முடிவு.!!
ஈரோடு அருகே சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பான வழக்கில் கொலையாளி மற்றும் அவருக்கு உதவி புரிந்த நபர்களை காவல்துறை கைது செய்திருக்கும் நிகழ்வு அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் கூறிய வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வனப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்
ஜூன் 25ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டபுரம் என்ற வனப்பகுதி கிராமத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக அந்த கிராம மக்கள் ஆசனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது மனித எலும்புக்கூடுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் எலும்புக்கூடுகளை சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட கொலையாளி
இந்நிலையில் சாக்கு மூட்டையில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது யார்.? அவரை யாரேனும் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசினார்களா.? என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த சூழலில் ஜூன் 27ஆம் தேதி தொட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான குமார் என்ற நபர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக காவல்துறையை நடத்திய விரிவான விசாரணையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட நபர் குமார் என்று உறுதியானது. காவல்துறை விசாரணையை தீவிர படுத்தியதை அறிந்த தொட்டாப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நாகமல்லு என்ற 24 வயது இளைஞர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... புது மாப்பிள்ளை மர்ம மரணம்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
கொலையாளியின் வாக்குமூலம்
காவல்துறையின் விசாரணையில் நாகமல்லு, குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குமார் மற்றும் நாகமல்லுவின் தாயான முத்துமணி ஆகியோருடைய கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இது தொடர்பாக நாகமல்லு பலமுறை எச்சரித்தும் குமார் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி நாகமல்லு தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அவரது தாயார், குமாருடன் தனிமையில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த ஆத்திரத்தில் கையில் கிடைத்த சுத்தியலை எடுத்து குமார் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனது உறவினரான மாதேவனை என்ற 21 வயது இளைஞருடன் சேர்ந்து குமாரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நாகமல்லு மற்றும் அவரது உறவினரான மாதேவனை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கொடுமை... 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்.!!