மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமை... 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்.!!
திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமானது தொடர்பாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு மாணவியுடன் காதல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். 21 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகள் கூறி பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
கர்ப்பமான மாணவி
இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரித்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது விக்னேஸ்வரன் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என மாணவி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னையில் போதை ஆசாமி கும்பலால் யூடியூபருக்கு நேர்ந்த சம்பவம்; அதிரவைக்கும் வீடியோ வைரல்.!
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விக்னேஸ்வரன்
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞருக்கு எதிராக புகார் அளித்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து விக்னேஸ்வரனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.!! தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!!