மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர் பாலியல் வன்புணர்வால் கர்ப்பமான சிறுமி... அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம் .!!
விருதுநகர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜெயசீலன் என்ற நபர் கைதாகி வழக்கு நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது.
சிறுமியின் தாயுடன் கள்ளக்காதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆலங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் அப்பகுதியில் வசித்து வந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவு முறையில் இருந்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கர்ப்பமான சிறுமி
மேலும் அந்த சிறுமியையும் மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டு இருக்கிறார் ஜெயசீலன். இதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸ் ஜெயசீலனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: சமைக்கலயான்னு கேட்டது ஒரு குத்தமாயா .." கழுத்தறுக்கப்பட்டு கணவன் படுகொலை.!! மனைவி வெறி செயல்.!!
20 வருட சிறை தண்டனை
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுதூர் போக்சோ நீதிமன்றம் விசாரணை மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி ஜெயசீலனுக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. சமீப காலமாக நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் கொடூரம்... நடைப்பயிற்சிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீத முடிவு.!!