மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமைக்கலயான்னு கேட்டது ஒரு குத்தமாயா .." கழுத்தறுக்கப்பட்டு கணவன் படுகொலை.!! மனைவி வெறி செயல்.!!
சேலம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான மனைவி
சேலம் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்தவர் பூங்கொடி. திருமணமான இவர் அப்பகுதியில் தனது கணவனுடன் வசித்து வந்தார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. அதன் காரணமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கணவன்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பூங்கொடியின் கணவர் சமையல் செய்ய வில்லையா.? என தனது மனைவியிடம் கேட்டிருக்கிறார். இது பூங்கொடிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவரது கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது அரிவாள்மனையால் அவரது கணவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார் பூங்கொடி.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் கொடூரம்... நடைப்பயிற்சிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீத முடிவு.!!
காவல்துறை கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூங்கொடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் பகுதியில் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 16 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.!!