#JustIN: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்; காரணம் என்ன?
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில், கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது மகன் கௌதம சிகாமணி, அவரின் மனைவி, உறவினர்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் வானூர், பூஞ்சோலை பகுதியில் குவாரிகளை டெண்டர் எடுத்துள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணை
இங்கு அளவுக்கு அதிகமாக செம்மண் லோடு ஏற்றப்பட்ட நிலையில், மொத்தமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான லோடு ஏற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக புகார் எழுந்து, அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுத்தது. அதனைத்தொடர்ந்து ரூ.14.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்த விவகாரத்தில் முடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "அரசியலுக்கு வருகிறேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கூல் சுரேஷ் பேச்சு.!
அமைச்சர் நேரில் ஆஜர்
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் விசாரணைக்கு ஆராஜகவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. சம்மன் வழங்கியதைத் தொடர்ந்து, இன்று அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
இதையும் படிங்க: #Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!