"கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டாங்க" - இயக்குனர் டிஜே ஞானவேல் வேதனை.. காரணம் என்ன?
"அரசியலுக்கு வருகிறேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கூல் சுரேஷ் பேச்சு.!
இளைஞர்கள் அதிகம் அரசியலுக்கு வர வேண்டும் என தன்னுடன் ஈவிகேஎஸ் பேசியதாக கூல் சுரேஷ் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்றுநோய் காரணமாக நேற்று காலமானார்.
கூலி சுரேஷ் வருகை
தமிழக அரசியலில் மூத்த தலைவராக கவனிக்கப்பட்ட இளங்கோவனின் மறைவுக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். பலரும் நேரில் வந்து அஞ்சலியை பதிவு செய்தனர். இதனிடையே, நடிகர் கூல் சுரேஷும் இளங்கோவன் உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: #Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!
அரசியலில் களமிறங்குகிறேன்
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், "கூல் சுரேஷ் கட்சி ஒன்று ஆரம்பிக்க போகிறேன் என்று ஐயாவிடம் சொன்னபோது, அவர் அவருக்கே உரித்தான பாணியில் சிரித்தார். பின் நொடியில், நீங்களும் மக்கள் சேவை செய்ய வருகிறீர்களா? உங்களைப்போல பல இளைஞர்களும் அரசியலில், மக்கள் சேவைக்காக முன்வர வேண்டும் என கூறினார்.
சாமி மாலை ஐயா காலுக்கு வந்தது
அவருக்கு நான் சாற்றியுள்ள மாலை, கோவிலுக்கு செல்ல வேண்டியது. அங்கு செல்ல வேண்டிய மாலை, ஐயாவின் மரணம் அறிந்து வாங்கி வந்தேன். கோவிலுக்கு செல்ல வேண்டிய மாலை, ஐயாவின் காலடிக்கு வந்துள்ளது.
ஆழ்ந்த இரங்கல்
ஒவ்வொரு பூவுக்கும் அதன் பிறப்பின்போது கருவறையா? கல்லறையா? என்பது தெரியாது. இன்று பூத்த பூ ஐயாவின் காலடிக்கு வந்துள்ளது. தகப்பன் இல்லாத வழி எனக்கு தெரியும். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை.. "நல்ல செய்தி" - செல்வப்பெருந்தகை தகவல்.!