திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கண்கலங்கி அழுத துணை முதல்வர் உதயநிதி; முரசொலி செல்வம் மறைவால் மீளாத்துயரம்.!
முரசொலி நிறுவனத்தில் நிர்வாக ஆசிரியராகவும், மூத்த பணியாளராகவும் இருந்து வந்தவர் முரசொலி செல்வம். இவர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.
மறைந்த தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதியின் அன்பை பெற்ற, நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த முரசொலி செல்வம், இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலினின் தங்கை கணவர் ஆவார்.
இதையும் படிங்க: கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!
தற்போது 84 வயதாகும் மாறன் கட்சிப்பணிகள் உட்பட பிற அனைத்திலும் பெரிய அளவில் முகம் காண்பிக்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே, இன்று அவர் மாரடைப்பால் காலமானார் .
குழந்தை போல் மாமாவை நினைத்து கலங்கி அழுத து.முதல்வர்..!#udhayanidhistalin #murasoliselvam pic.twitter.com/MCY4ciAavt
— Thanthi TV (@ThanthiTV) October 10, 2024
பெங்களூரில் அவர் தங்கியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் கோபாலபுரத்தை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள், செல்வத்தின் நண்பர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தனது மாமாவை இழந்த சோகத்தில் துணை முதல்வர் உதயநிதி கண்கலங்கி வருத்தத்தில் அழுதார்.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதியை அணுஅணுவாக ரசித்து சொற்பொழிவாற்றிய கவிஞர் வைரமுத்து; விபரம் உள்ளே.!